சென்னை: இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! அதனால்,  இரயில் கட்டணத்தை உயர்த்தி மக்களின் கவலையை மேலும் அதிகரிக்க வேண்டாம் என மத்தியஅரசு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜூலை 1 ஆம் தேதி முதல் இரயில் கட்டணங்களை உயர்த்துவது குறித்து இந்திய ரயில்வே பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. AC அல்லாத விரைவு ரயில்களுக்கான கட்டம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பைசாவும், AC பெட்டிகளுக்கான கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசாவாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், றநகர் டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டண உயர்த்தப்படாது. இருப்பினும் 500 கி.மீ வரையிலான இரண்டாம் வகுப்பு கட்டணம் ஒரு கி.மீக்கு அரை பைசா என்ற விகிதத்தில் உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காடிபாடிக்கு ரயில் மூலம் பயணம்மேற்கொண்ட நிலையில், ரயில் கட்டணம் உயர்வு குறித்தும், சாதாரண பெட்டிகள் குறைப்பு குறித்தும் தனது கவலையை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் சமுக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இந்திய இரயில்வே என்பது ஏழை – நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்!

இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் – குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

மாண்புமிகு பிரதமர் @narendramodi மற்றும் மாண்புமிகு @AshwiniVaishnaw அவர்களையும், மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…

AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். இரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம்.

ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்!

The Indian Railway isn’t just a service – it’s family!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

.