புதிய டெஸ்ட் ஜெர்சியில் இந்திய கிரிக்கெட் அணி! புகைப்படங்கள் வெளியீடு

Must read

டில்லி:

புதிய டெஸ்ட் ஜெர்சியில் அணிந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியினர் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த  புதிய  ஜெர்சியில் கேப்டன் விராட் கோலிக்கு 18ம் எண் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய டெஸ்ட் ஜெர்சியுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டை பிரபலப்படுத்தும் நோக்கில் ஐசிசி இந்திய வீரர்களுக்கு வெள்ளை நிற ஜெர்சியுடன் பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்களின் உடைகளில் பெயர் மற்றும் எண் இருக்காது. ஆனால், தற்போது திருத்தப்பட்ட விதிகளின் படி,   டெஸ்ட் ஜெர்சியில் அவர்களது பெயரும் எண்ணும் இடம்பெற வேண்டியது கட்டயமாகி உள்ளது. அதைத்தொடர்ந்து பிசிசிஐ இந்திய கிரிக்கெட் அணிக்கு பெயர் மற்றும் எண் பொறிக்கப்பட்ட  புது ஜெர்சியை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தி புதிய ஜெர்தசியை  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வார்ம்-அப் போட்டியில் வீரர்கள் இந்த ஜெர்சியை அணிந்திருந்தனர்.  இந்த ஜெர்சிதான் அதிகாரப்பூர்வமான டெஸ்ட் ஜெர்சி என்று   இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரபூர்வ  இன்ஸ்டாகிராமில் இன்று அறிவிக்கப்பட்டு உள்ளத.

இந்த ஜெர்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 18 எண்ணையும், ரோஹித் ஷர்மா 45 எண்ணையும் பயன்படுத்தியுள்ளார். இந்தியாவுக்கு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் செதேஷ்வர் புஜாரா 25-யை பயன்படுத்தியுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், முகமது ஷமி, இஷாந்த் சர்மா, குலதீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் முறையே 17, 11, 97, 23, 99, 8 ஆகிய எண்களைப் பயன்படுத்தியுள்ளனர்.  தோனியின் ஜெர்சி எண் 7 வேறு யாருக்கும் கொடுக்கப்படவில்லை.

2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் போட்டி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பாகம் என்பதால் போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

More articles

Latest article