சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில், தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்றனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா இடம்பெற்றுள்ள இந்தியாவின் பி அணி வெண்கலம் பெற்றுள்ளது.

செஸ்ஒலிம்பியாட் போட்டியின் 11வது சுற்று இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற்று வந்தன. நேற்று நடைபெற்ற 10வது சுற்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்ற நிலையில், இறுதிபோட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், பிக்ஞானந்தா இடம்பெற்ற இந்தியவின் பி ஆண்கள் அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற நிலையில், தற்போதுதான் மீண்டும் இந்தியா 2வது முறையாக பதக்கம் பெற்றுள்ளது.
அதுபோல தனிநபர் பிரிவில், இந்திய வீரர்கள் குகேஷ், நிகால் சரின் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அர்ஜூன் எரிகாசி வெள்ளிப்பதக்கமும், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கமும் பெற்றுள்ளனர். மேலும் வைஷாலி, தானியா சச்தேவ், திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
[youtube-feed feed=1]