டில்லி
இந்தியா மருந்துகள் ஏற்றுமதியில் வீழ்ச்சி கண்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இந்திய மருந்துகள் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் உதயபாஸ்கர் வெளியிட்டுள்ள தகவலின்படி இந்திய மருந்துக்ள் ஏற்றுமதி கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் 4% வீழ்ச்சி அடந்துள்ளதாக தெரிவிக்கிறார். அவருடைய அறிக்கையில் காணப்படுவதாவது :
“இந்திய மருந்துகள் ஏற்றுமதியானது ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் 7.9% வீழ்ச்சி அடந்தந்து. பின்பு அது சற்றே அதிகரித்து ஆகஸ்ட் மாதம் 4% வீழ்ச்சியாக இருந்தது. இதற்கான முக்கிய காரணம் ஜி எஸ் டி அமுலாக்கத்தின் பின் ஏற்பட்ட விலைக் கொள்கையே ஆகும். அது மட்டுமின்றி, தற்போதைய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கும் இந்த வீழ்ச்சியில் பங்குண்டு.
இந்த வருட இறுதிக்குள் ஏற்றுமதியானது முன்னேற்றம் அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஜி எஸ் டி அமுலாக்காம் ஆன உடன் ஏற்பட்ட குழப்பங்களினால் இந்த விழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும் தற்போது இது பற்றிய புரிதல் அதிகரித்து வருவதால் ஏற்றுமதி வளர்ச்சி அடையும் என நம்பப்படுகிறது” என கூறி உள்ளார்.
ஆனால் ஏற்றுமதித் துறை தெரிவித்துள்ள புள்ளி விவரங்களின் படி 2015-16ஆம் வருடத்தில் $16.9 பில்லியனாக இருந்த ஏற்றுமதி 2016-17ஆம் வருடம் சற்றே குறைந்து $16.64 பில்லியனாக உள்ளது என தெரிய வருகிறது.