ஐதராபாத்,

க்கள் அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையான நலன்களை பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் அவர்களை செருப்பாடி அடியுங்கள் என்று தெலுங்கான மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியாக கூறினார்.

இதன் காரணமாக மாநில அரசு அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தெலுங்கான மாநிலத்தில் உள்ள சிங்கரேணி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் தொழிலாளர் சங்க தேர்தலில் சந்திரசேகராவின் டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது,

தெலங்கானா  போகு  கனி கர்மிகா சங்கத்துக்கு  என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  இது நாள் வரை தொழிலாளர்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்தாததுக்கு மன்னிப்பு கேட்டுகொள்கிறேன்.

நமது மாநிலம் புதிய மாநிலம் என்பதால் பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது உள்ளது. தினமும் புதுபுதுப் பிரச்னைகளை  சந்திக்க வேண்டி உள்ளது. அதனால் சிங்கரேணி தொழிலாளர் பிரச்னையில் கவனம் செலுத்த முடியவில்லை என்றார்.

மேலும், மக்கள் அரசிடம் இருந்து தங்களுக்கு தேவையான சேவைகளையோ, பலன்களையோ பெற அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள் என்றும், மீறியும் கேட்கும் அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்.. எக்காரணம் கொண்டும் மாநிலத்தில் லஞ்சத்தை ஊக்குவிக்க வேண்டாம்.

இவ்வாறு  அவர் பேசினார்.

முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சு விழாவில் கலந்துகொண்ட  அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.