கோலாலம்பூர்:

ந்தியாவில் இருந்து மலேசியா செல்லும் சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியா சுற்றுலா பயணிகள் விசா இல்லாமல் 15 நாட்கள்  மலேசியாவில் பயணம் செய்யலாம் என்று சலுகை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து மலேசிய அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

மலேசியாவுக்கு சுற்றுலா வர விரும்பும்  இந்தியர்கள், இந்தியாவில் உள்ள மலேசிய தூதரகத்தில் தங்களது பெயதை பதிவு செய்ய  வேண்டும் என்றும் பெயர் பதிவு செய்த நாளில் இருந்து  அடுத்த 3  மாதங்களுக்குள் சுற்றுலா வர வேண்டும் என்றும் கூறி உள்ளது.

மேலும்,, சுற்றுலா வருகையில் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிச் செல்லும் வகையிலா பயணச்சீட்டோ அல்லலு வேறு நாடுகளுக்கு செல்வதாக இருந்தால், அதற்கான  பயண டிக்கெட் வைத்திருக்க வேண்டும் என்றும்  தெரிவித்து உள்ளது.

ஒருமுறை பயணமாக வருவோர்,  45 நாள்கள் கழித்த பிறகே மலேசியாவுக்கு மீண்டும் வர முடியும் என்றும், இந்த விசா சலுகை 2020ம் ஆண்டு  ஜனவரி 1 முதல் டிசம்பர் 26  வரை இம்முறை அமலில் இருக்கும் என்றும் அறிவித்து உள்ளது.