புதுடெல்லி:
நிவர் புயலால் எற்படும் விளைவுகளை சமாளிக்கவும், பேரிடர் நிவாரணப்பணிகளை நடத்தவும், கடலோர காவற்படையும், இந்திய கடற்படையும் தயார் நிலையில் உள்ளன.
கடலோர காவற்படையின் நான்கு கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, தேவையான அவசரகால உதவியை செய்ய பணிக்கப்பட்டுள்ளன. கடலோர காவற்படையின் இரண்டு டோர்னியர் விமானங்கள் தயார் நிலையில் விசாகப்பட்டினத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
கப்பற்படையின் ஐஎன்எஸ் ஜோதி என்ற கப்பல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களும், டைவிங் குழுக்களும் கப்பலில் உள்ளன. நாகை, ராமேஸ்வரம் மற்றும் ஐஎன்எஸ் பருந்துவில் வெள்ள நிவாரண குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.சென்னையில் 5 வெள்ள நிவாரண மீட்பு குழுக்கள், ஒரு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் குழு தயார் நிலையில் உள்ளது.