வாஷிங்டன்:
ர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக கிருஷ்ணா சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய-பசிபிக் துறையின் இயக்குனராக இருந்த சான்கியாங் ரீ, கடந்த மார்ச் 23-ந் தேதி ஓய்வு பெற்றார். அதைத்தொடர்ந்து அப்பதவி காலியாக இருந்தது. இந்த நிலையில், தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன், இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் 22-ந் தேதி பொறுப்பேற்றுக் கொள்கிறார். அதை ஐ.எம்.எப். நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா நேற்று அறிவித்தார்.