திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் நெடுமுடி வேணு (வயது 73)  உடல்நலக்குறைவால் திருவனந்தபுரத்தில் காலமானார். அவர் கமல்நடித்த இந்தியன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தவர்.

தமிழில், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாளமயம்’ உட்பட பல படங்களில் நடித்த நெடுடி வேணு, இயக்குநர் ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்தவர் நெடுமுடி வேணு. இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் நடத்துள்ளார். 3 தேசிய விருது,  6 மாநில விருதுகளை பெற்ற குணசித்திர நடிகர்.

இவர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவர் காலமானதாகஅறிவிக்கப்பட்டுள்ளது.