தோகா
இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணிக்கு ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.
தற்போது தோகாவில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலப்பு தொடர் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அரை இறுதிப் போட்டியில் இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணி வீரர்கள் பங்கு கொண்டனர்.
இந்திய அணியினர் அரை இறுதிச் சுற்றில் 3 நிகிடம் 16.14 விநாடிகளில் குறிப்பிட்ட 600 மீட்டர் தூரத்தை கடந்தனர். இந்த வெற்றியால் அவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
வரும் 2020ஆம் ஆண்டு டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றதன் மூலம் இந்திய கலப்பு தொடர் ஓட்ட அணி இந்த போட்டியில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளது.