லண்டன்: பிரிட்டனில் ஹாக்கித் தொடரில் கலந்துகொள்ள சென்றுள்ள இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி, முதல் போட்டியில் பிரிட்டன் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

மொத்தம் 5 போட்டிகள் நடைபெறும் நிலையில், முதல் போட்டி மார்லோவில் நடைபெற்றது. இப்போட்டியின் முதல் பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

போட்டித் தொடங்கி 46வது நிமிடத்தில், பிரிட்டனின் எமிலி கோல் அடிக்க, அந்த அணி முன்னிலைப் ப‍ெற்றது. பின்னர் கடைசி கட்டத்தில் இந்திய அணியின் ஷர்மிளா ஒரு கோல் அடித்த ஆட்டத்தை சமன் செய்தார்.

பின்னர், யாருக்கு வெற்றி என்ற நிலையில் சென்ற ஆட்டம் முடிய வெறும் 48 விநாடிகளே இருந்தபோது இந்தியாவுக்கு பெனால்டிக் கார்னர் வாய்ப்பு கிடைக்க, இந்தியாவின் குர்ஜித் கவுர் அதை கோலாக்கினார். இதனால், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.