டில்லி

ந்திய ராணுவ வீரர்களைக் கேவலம் செய்யும் ஒரு வெப் சீரியஸ் குறித்து இந்திய அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது ஓடிடி தளங்களில் வெப் சீரியஸ் வெளியாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி வருகிறது.  அவ்வகையில் எக்தா கபூர் தயாரித்துள்ள டிரிபிள் எக்ஸ் 2 தணிக்கை செய்யப்படாதது என ஒரு வெப் சீரியஸ் வெளியாகி உள்ளது. இதில் நாட்டுக்காக பணியாற்றும் ராணுவ வீரர் எல்லையில் உள்ள போது அவர் மனைவி வேறொரு ஆணுடன் பழக்கம் வைத்திருப்பது போல் காட்சிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த சீரியஸில் ஒரு காட்சியில் அசோக சக்கர முத்திரையுடன் உள்ள ஒரு ராணுவ சீருடையைக் கிழிப்பது போல் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.   இதையொட்டி தயரிப்பாள்ர் மீது முன்னாள் ராணுவ வீரர் டிசி ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த விவகாரம் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகம்  இந்தியத் தணிக்கை வாரியத்துக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளது.

அந்த கடிதத்தில்

ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் இந்திய ராணுவத்தினரை கேவலம் செய்வது போல் படங்கள் மற்றும் வெப் சீரியஸ்கள் தயாரித்து வருவதாக அமைச்சகத்துக்குப் புகார்கள் வந்துள்ளன.  எனவே இவ்வாறு ராணுவத்தினரைக் கதை மாந்தர்களாகக் கொண்ட அனைத்து திரைப்படம் மற்றும் வெப் சீரியஸ்கள் வெளியீட்டுக்கு முன்பு பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.