கூகுளில் ரூ.1.08 கோடி ஊதியத்தில் பணி புரியும் இந்தியப்பெண் மதுமிதா

பாட்னா

பாட்னாவை சேர்ந்த மதுமிதா என்னும் பெண்ணுக்கு ரூ.1.08 கோடி ரூபாய் ஊதியத்தில் கூகுளில் பணி புரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பீகார் மாநிலத்தி பாட்னாவில் உள்ள சன்பத்ரா பகுதியில் வசிப்பவர் மதுமிதா.  25 வயதான இவர் ஜெய்ப்பூரில் உள்ள ஆர்யா தொழில்நுட்ப கல்லூரியில் பி. டெக். பட்டம் பெற்றவர்.   இவருக்கு அமேசான், மைக்ரோசாஃப்ட், மெர்சிடஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணி புரிய வாய்ப்புக்கள் தேடி வந்தன.

தற்போது  மதுமிதாவுக்கு கூகுள் நிறுவனத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  தொழில்நுட்ப தீர்வுகள் பொறியாளர் பதவியில் இவர் நியமிக்கப் பட்டுள்ளார்.  இவருக்கு  ஏழு சுற்றுக்கள் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு தற்போது பணி புரியும் வாய்ப்பு கிடைத்துள்ளது.  நேற்று முன் தினம் பணியில் சேர்ந்துள்ள இவருக்க்கு வருட ஊதியமாக ரூ.1.08 கோடி வழங்க கூகுள் ஒப்புக் கொண்டுள்ளது.

Tags: Indian girl joined google with a salary or Rs 1.08 cr