சர்வதேச வாள்வீச்சு போட்டி: தமிழக வீராங்கனை தங்கம் வென்று சாதனை!

Must read

ஐஸ்லாந்து,

ஸ்லாந்தில் நடெபற்ற  சர்வதேச வாள்வீச்சு போட்டியில் இந்தியா சார்பாக களமிறங்கிய தமிழக வீராங்கனை பவானிதேவி முதல்பரிசு வென்று தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்ள இந்தியா சார்பாக தமிழக வீராங்கனை பவானிதேவி சென்றிருந்தார்.

அங்கு நடைபெற்ற பல்வேறு சுற்றுப்போட்டிகளிள் வென்ற பவானிதேவி, அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனை ஜெஸிகா கார்பியை எதிர்கொண்டார். அவரை   15-11 என்ற கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு தயாரானார்.

இறுதிச்சுற்றிலும் அவர் பீரிட்டனின் மற்றொரு வீராங்கனையை எதிர்கொள்ள நேரிட்டது. பிரிட்டனை சேர்ந்த சாரா ஜேன் ஹாம்சன் பவானிக்கு கடும் சவாலாக திகழ்ந்தார். இருந்தாலும் தமிழக வீராங்கனையான பவானி திறமையாக விளையாடி  15-13 என்ற செட் கணக்கில் பிரிட்ன் வீராங்கனையை வீழ்த்தி தங்க பதக்கத்த தட்டிச்சென்றார்.

இதன் காரணமாக  சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை தமிழகத்தை சேர்ந்த பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வீராங்கனையான பவானிதேவி ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார். ஆனால், உலக அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article