புதுடெல்லி: ஒட்டுமொத்தமாக 55 ஆண்டுகள் கழித்து இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி பாகிஸ்தான் செல்கிறது.

கடைசியாக கடந்த 1964ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்றிருந்தது இந்திய டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி.

கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு இருநாட்டு அணியினரும் மும்பையில் விளையாடினர். அதற்கு முன்னதாக கடந்த 1973ம் ஆண்டு மலேசியாவில் ஆடியிருந்தனர். இதனையடுத்து, தற்போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்காத இந்திய அணியின் கேப்டன் மகேஷ் பூபதி, அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷனை(ஏஐடிஏ) தொடர்புகொண்டு, பாகிஸ்தானிடம் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பெறும்படி கேட்டிருந்தார்.

அதனடிப்படையில், அந்த அமைப்பின் செக்ரட்டரி ஜெனரல் இதுதொடர்பாக கவனம் செலுத்தி, பாகிஸ்தானுடன் தொடர்புகொண்டதற்கு, பாகிஸ்தான் டென்னிஸ் ஃபெடரேஷன் சார்பில் முழு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாய் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய டேவிஸ் கோப்பை அணியின் சுற்றுப்பயணம் செப்டம்பர் 14-15 தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளது.