ஹிமாதாஸ் – யுனிசெஃப் இந்தியா அமைப்பின் இளம் தூதுவராக நியமனம்!

Must read

புதுடெல்லி: யுனிசெஃப் இந்தியா அமைப்பிற்கான முதல் இளம் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் தங்க மங்கை ஹிமா தாஸ்.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில் ஐரோப்பாவின் போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் நிகழ்ந்த தடகளப் போட்டிகளில் ஒரே மாதத்தில் மொத்தம் 5 தங்கப் பதக்கங்கள் பெற்று அசத்தினார் ஹிமா தாஸ்.

இதனையடுத்து, யுனிசெஃப் இந்தியாவின் முதல் இளம் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனை அந்த அமைப்பு தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இந்தப் பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும், இதன்மூலம் ஒவ்வொரு குழந்தையும் அதன் கனவை நனவாக்குவதற்கு தன்னால் துணைபுரிய முடியும் என்றும் கூறியுள்ளார் ஹிமா தாஸ்.

அஸ்ஸாம் மாநிலத்தின் நாகவோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 19 வயதேயான தங்க மங்கை. கடந்த 2018 ஆசிய விளையாட்டில், மகளிர் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்.

More articles

Latest article