அஹமதாபாத்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி களமிறங்கியுள்ளது.


பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையொட்டி  நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 92 . இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இவர், இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். தமிழில் ‘வளையோசை கலகல’ என்ற பாடலை இவர் பாடியுள்ளார் பாடகி லதா மங்கேஷ்கர். நாட்டின் உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர்,  1999 முதல் 2005 ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.  80 ஆண்டு காலம் தனது இனிய குரலால் இந்திய மக்களை மகிழ்வித்த லதா மங்கேஷ்கர் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடு முழுவதும் இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அத்துடன் முழு அரசு மரியாதையுடன் லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் நடக்கும் என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 1000-வது ஒருநாள் போட்டி – லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி கையில் கருப்பு பட்டை அணிந்து இந்திய அணி விளையாடுகிறது.

அகமதாபாத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு ஒருநாள் போட்டியில் தீபக் ஹூடா அறிமுக வீர‌ராக களமிறங்குகிறார்.