மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி-20 போட்டிகளில் விளாயாட இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது.

கரீபியன் தீவில் உள்ள பார்படாஸ் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இந்திய அணியினர் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான சர் கார்பீல்ட் சோபர்ஸை சந்தித்தனர்.

1954 – 1974 வரை மேற்கு இந்திய தீவுகள் அணிக்காக விளையாடிய சர் கார்பீல்ட் சோபர்ஸ் 1968ம் ஆண்டு முதல் தர கிரிக்கெட் போட்டியில் ஒரே ஓவரில் தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிஸ்சர்கள் அடித்த முதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங் மட்டுமன்றி பௌலிங், பீல்டிங் என ஆல்-ரவுண்டராக திகழ்ந்த கிரிக்கெட் உலகின் முன்னோடியான இவருக்கு இப்போது வயது 87.

தனது மனைவியுடன் பார்படாஸ் ஸ்டேடியத்திற்கு வந்த சோபர்ஸ்-க்கு இந்திய அணி வீரர்களை அறிமுகப்படுத்தினார் ராகுல் டிராவிட்.

சர் கார்பீல்ட் சோபர்ஸ் பெயரால் ஐசிசி வழங்கும் விருதை மூன்று முறை பெற்றுள்ள இந்திய அணியின் விராட் கோலி அவரை நேரில் சந்தித்தது மகிழ்ச்சியளித்ததாக கூறினார்.