ஜெய்சல்மார், ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஒரு அரிய இனமான பஸ்டர்ட் பறவையின் முட்டை கண்டெடுக்கபட்டு செயற்கை முறையில் குஞ்சு பொறிக்கப்பட்டுள்ளது.

பல அரிய பறவைகள் அழிந்து வருகின்றன. இவற்றுக்கு முக்கிய காரணம் இந்த பறவைகளின் இறைச்சி மற்றும் முட்டைகளை மனிதர்கள் உணவாக உண்பதே ஆகும். இவ்வகை பறவைகளை மீண்டும் உயிர்பிக்க பல முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் வனவிலங்கு காப்பகம் மற்றும் ராஜஸ்தான் மாநில வனத்துறை இணைந்து கடந்த 2018 ஆம் ஆண்டு செயற்கை குஞ்சு பொறிக்கும் நிலையம் ஒன்றை ஏற்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஜெய்சல்மார் பகுதியில் இந்நிலையம் ஏற்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு பல இடங்களில் உள்ள பறவைகளின் முட்டைகளை சேகரித்து வந்து அவற்றை இன்குபேடர் மூலம் செயற்கை முறையில் அடைகாத்து குஞ்சு பொறித்து வருகின்றது. உலகின் அபூர்வ பறவை இனங்களில் ஒன்றான பஸ்டர்ட் என அழைக்கப்படும் பறவையின் ஆறு முட்டைகள் சமீபத்தில் கிடைத்துள்ளன.

அந்த முட்டைகள் ஜெய்சல்மார் அடைகாக்கும் இல்லத்துக்கு எடுத்து வரப்பட்டு இன்குபேடர் மூலம் அடைகாக்கப் பட்டுள்ளன. இந்த ஆறு முட்டைகளில் இருந்து ஒரு முட்டையில் மட்டும் குஞ்சு பொறிக்கப்பட்டுள்ளது. இருபத்து எட்டு நாட்கள் அடைகாத்தலுக்கு பிறகு வந்துள்ள இந்த அரிய வகைப் பறவை நல்ல ஆரோக்யமாக உள்ளது. அதற்கான சிறப்பு தீவனங்கள் அளிக்கப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள்து.