டில்லி:

ந்திய பின்லேடன் என்று வர்ணிக்கப்படும் பயங்கரவாதி அப்துல் சுபான் குரேஷி ஒருபோதும் பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை என்று அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.   20 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த பயங்கர சம்பவத்துக்கு ‘இந்தியன் முஜாகிதீன்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த சம்பவம் தொடர்பாக ‘இந்தியன் முஜாகிதீன்’ மற்றும் ‘சிமி’ பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட அப்துல் சுபான் குரேஷி என்ற பயங்கரவாதி தப்பி ஓடிவிட்டார். இவர் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் இணை நிறுவனர் ஆவார்.

அவர் ஆரம்பத்தில் நேபாளத்திலும் பிறகு சவுதியிலும் இருந்தது தெரயவந்தது. அவரது கூட்டாளிகள் மூலம் அவரது நடவடிக்கைகளை உளவுத்துறையும், சிறப்பு பிரிவு போலீசாரும் கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் டில்லி அருகே உள்ள காசிப்பூரில் வசித்து வரும் தனது கூட்டாளி ஒருவரை சந்திக்க அப்துல் சுபான் குரேஷி வருவதாக சிறப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்த காவல்துறையினர்  அங்கே கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தினர்.

அப்துல் சுபான் குரேஷி, காசிப்பூருக்கு வந்தபோது, அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.   இறுதியில் காவல்துறையினர் குரேஷியை  கைது செய்தனர்.

இந்த நிலையில், அப்துல் சுபான் குரோஷியின் தந்தை, தனது மகன் பயங்கரவாதி கிடையாது. பான் குரேஷி  ஒருபோதும் பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.