புதுடெல்லி: ஆசிய விளையாட்டு 4*400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த இந்தியக் கலப்பு அணிக்கு, தற்போது தங்கப்பதக்கம் தேடி வந்துள்ளது.
ஏனெனில், 2018ம் ஆண்டில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில், தங்கம் வென்றிருந்த பஹ்ரைன் அணியில் இடம்பெற்றிருந்த கெமி அடெக்கோயா ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால், பஹ்ரைன் அணியின் தங்கம் பறிக்கப்பட்டு, இரண்டாமிடம் பெற்ற இந்திய அணிக்கு வழங்கப்பட்டது.
இந்திய கலப்பு அணியில் முகமது அனாஸ், பூவம்மா, ஹிமா தாஸ் மற்றும் ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் பஹ்ரைனின் கெமி அடெக்கோயா வ‍ென்ற வெண்கலமும் பறிக்கப்பட்டு, அப்போட்டியில் நான்காம் இடம்பெற்ற இந்தியாவின் அனு ராகவனுக்கு வழங்கப்பட்டது.