டெல்லி: இஸ்ரேல் காசா போர், துபாய் மழை வெள்ளம் காரணமாக, இந்தியன் ஏர்லைன்ஸ், இஸ்ரேல் மற்றும் துபாய் நாடுகளுக்கு விமான சேவைகளை தற்காலிகமாக ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது.

இந்திய விமான நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் காரணமாகவும்,  “விமான நிலையத்தில் தொடர்ச்சியான செயல்பாட்டு இடையூறுகள்” காரணமாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இண்டிகோ ஆகியவை தங்கள் சில சேவைகளை ரத்து செய்துள்ளன. மறு அட்டவணை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

இஸ்ரேல் காசா இடையிலான போர், மற்றும் ஈரான் இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. இதனால், இந்தியாவில் இருந்து,  இஸ்ரேல் தலைநகா் டெல் அவீவ் நகருக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏா் இந்தியா அறிவித்தது.

இதேபோல்,  துபாய் உள்பட சில அரபு நாடுகளில்  கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அந்த நகரத்துக்கான விமான சேவையையும் ஏா் இந்தியா ரத்து செய்துள்ளதாக அறிவித்தது.

 இதுதொடா்பாக ஏா் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் ,  டெல் அவீவ் மற்றும் தில்லி இடையேயான விமான சேவைகள் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும், துபைக்கு இயக்கப்படும் விமானங்கள் ஏப்ரல் 21-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

துபை நகரில் விமானங்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளா்களின் பயணத்தை உறுதிசெய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என தெரிவிக்கப்பட்டது.  ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு பயணக்கட்டணம் ரத்து மற்றும் மறுஅட்டவணையின்போது ஒருமுறை மட்டும் சலுகை அளிக்கும் வகையில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏா் இந்தியா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் தாக்குதலை நடத்தியதையடுத்து மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் துபை பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு  இந்திய தூதரகம் அறிவுரை  வழங்கி உள்ளது.  வரலாறு காணாத பெருமழைக் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், ஐக்கிய அரபு அமீரகம் வழியாக மேற்கொள்ளப்படும் தேவையற்ற பயணங்களை சில நாள்களுக்குத் தவிா்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

உலகின் பரபரப்பான துபை சா்வதேச விமான நிலையம், அடுத்த 24 மணி நேரத்துக்குள் வழக்கமான அட்டவணைக்கு திரும்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகம் வழங்கியுள்ள அறிவுறுத்தலில், ‘பயணச் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில், துபை சா்வதேச விமான நிலையத்துக்கு அல்லது அதன் வழியாக பயணிக்கும் அத்தியாவசியமற்ற பயணத்தை இந்திய பயணிகள் மாற்றியமைக்க அல்லது தவிா்க்க அறிவுறுத்தப்படுகிறாா்கள். துபை சா்வதேச விமான நிலையத்தில் உதவி தேவைப்படும் இந்தியா்களுக்கு அவசர உதவி எண்களை அந்த நகரிலுள்ள இந்திய துணைத் தூதரகம் வெளியிட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.