டில்லி:

நாடு முழுவதும் நாட்டின் 87வது விமானப்படை தினம் இன்று  கொண்டாடப்பட்டு வருகிறது.  இதையடுத்து விமானப்படை வீரர்கள் குடியரசுத் தலைவர் பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் விமானப்படை கடந்த 1932 ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போதைய தொழில்நுட்பத் தில் விமானபடை அதீத வளர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு சான்றாக இன்று நமது ராணுவத்தில்  இடம்பெற்றுள்ள மிக் ரக போர் விமானங்கள் மற்றும் விரைவில் இன்றுமுதல் சேர உள்ள ரஃபேர் போர் விமானங்கள்.

விமானப்படை தினத்தையட்டி, இன்று டில்லி , விசாகப்பட்டனம், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான படை வீரர்கள், விமானம் மூலம் சாகங்களை நிகழ்த்தி காட்டி இன்றைய தினத்தை  கொண்டாடி வருகின்றனர்.

குடியரசுத் தலைவல்ர ராம்நாத் கோவிந்த் அவரது வாழ்த்து செய்தியில்: இந்திய விமான படையினரால் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம். அவர்களது தியாகம் என்றும் போற்றுதலுக்குரியது. நமது நாட்டின் வான் எல்லையை மிக கவனமாக காத்து வருவதில் தங்களை அர்ப்பணிக்கும் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்!

பிரதமர் மோடி  வாழ்த்து தெரிவித்துள்ள டிவிட்டர் பதிவில், இன்றைய விமானப்படை தினத்தில், வீரர்களுக்கு நன்றி செலுத்தி பெருமை கொள்கிறது இந்த தேசம். விமானபப்படையினர் இந்தியாவுக்கு அர்ப்பணிப்புடன் சிறப்பாக தொடர்ந்து சேவை செய்து வருகின்றனர்.