சுவீடன் நாட்டைச் சார்ந்த பிளைட் ராடார் நிறுவனம் https://www.flightradar24.com என்ற இணையத்தளத்தின் மூலம் உலகமெங்கும் பயணிக்கும் விமானங்களின் நிகழ்நேர இருப்பிடத்தை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் சேவையை வழங்கிவருகிறது.

ஆனால் நேற்று பாகிஸ்தானில் இந்திய விமானப்படை நடத்திய தீவிரவாதிகளின் மேல் நடத்திய தாக்குதலில் இந்திய விமானப்படையில் பயணங்களை இணையத்தில் சில வலைப்பதிவர்கள் தொடர்ந்து எழுதிவந்தனர். அவர்களுக்கு இந்தத் தகவல்கள் https://www.flightradar24.com இத்தளத்தின் மூலம் கிடைக்கிறது.

சாதாரண பயணிகளின் விமானங்களை இணையத்தில் காட்டுவது விமானத்தின் பயணம் செய்பவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு தகவல்களை அறிந்துகொள்ள வசதியாக இருக்கும். ஆனால் விமானப்படை விமானங்களை நிகழ்நேரத்தில் காட்டுவது அந்தந்த நாட்டு பாதுகாப்புத்துறையினருக்கு பெரும் சிக்கலை விளைவிக்கும்.

இந்தியா தீவிரவாதிகளின் மேல் நடத்திய  தாக்குதல் நேரத்தில் இணையத்தில் வலம் வந்த இந்திய விமானப்படை விமானத்தின் பயணங்கள் பற்றி விபரம் இங்கே படமாக இணைக்கப்பட்டுள்ளது.

ராணுவ விமானங்களின் போக்குவரத்துகளை நிகழ்நேரத்தில் காட்டுவதும் மட்டுமல்லாமல் இந்த நிறுவனம் 35 டாலர் செலுத்தினால்  கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற  விமானப்பயணம், விமான எவ்வளவு உயரத்தில் பறந்தது, அதன் வேகம், உட்பட பல  குறைந்த கட்டணத்தில் அளித்து வருகிறது. இந்த தகவல்களை கொண்டு இராணுவ விமானங்களின் பயண நேரம், எங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.

தொழில்நுட்பங்கள் பயனுள்ளவைகளாக இருக்கவேண்டியதுதான், ஆனால் அது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருக்கக்கூடாது. ஒருவேளை இத்தளம் வழியாகவும் இந்திய விமானப்படை விமானங்களை பாகிஸ்தான் இராணுவம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கலாம்.

செல்வமுரளி