
‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் 12-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும், ஏப்ரல் 2021-ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .
கமல் – ஷங்கர் கூட்டணியில் மீண்டும் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க, படப்பூஜையுடன் படப்பிடிப்பை ஏற்கனவே தொடங்கப்பட்டது .ஆனால் ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ‘இந்தியன் 2’ பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 2021-ல் வெளியிடலாம் என கூறப்படுகிறது.
காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் கமலுடன் நடிக்கவுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ளார்.
[youtube-feed feed=1]