சர்வதேச பவுதிக போட்டி : இந்தியாவுக்கு 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள்

Must read

டெல் அவிவ், இஸ்ரேல்

ஸ்ரேலில் நடந்த சர்வதேச பவுதிக போட்டியில் இந்திய மாணவர்கள் இரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர்

சர்வ தேச பவுதிக போட்டி என்பது மாணவர்களுக்கான  வினா விடை போட்டி ஆகும். இந்த போட்டி கடந்த 7 முதல் 14 வரை இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகரில் நடந்தது. இதில் உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் இருந்து 363 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த போட்டி ஞாயிறுடன் முடிவடைந்துள்ளது.

இதில் பல சுற்று போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய மாணவர்கள் ஐவர் பதக்கம் வென்றுள்ளனர். இந்திய மாணவர்கள் இரு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளி பதக்கங்களும் வென்றுள்ளனர். இவர்களில் மூவர் இந்தியாவில் நடந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் முதல் இடங்களை பிடித்தவர்கள் ஆவார்கள்.

டில்லியை சேர்ந்த ஆர்சிட் புப்னா மற்றும் ராஜ்கோட்டை சேர்ந்த நிஷாந்த் அபாங்கி ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர், மற்றும் இந்தூரை சேர்ந்த துருவ் அரோரா, சோனிபட்டை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் அகர்வால் மற்றும் சூரத்தை சேர்ந்த கௌஸ்துப் திகே ஆகியோர் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர்.

More articles

Latest article