லக்னோ: தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கு எதிரான 3வது டி-20 போட்டியில், இந்திய பெண்கள் அணி பிரமாண்ட வெற்றியை பெறும் நிலையில் உள்ளது.
தென்னாப்பிரிக்க பெண்கள் அணிக்கெதிரான டி20 தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது இந்திய அணி. தற்போது மூன்றாவது போட்டி நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய பெண்கள் அணி, தென்னாப்பிரிக்காவை முதலில் பேட் செய்ய அழைத்தது. தென்னாப்பிரிக்க அணியில் லூஸ் மட்டும் அதிகபட்சமாக 28 ரன்கள் அடிக்க, அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய பெண்கள் அணி, தற்போதைய நிலையில், 8.2 ஓவர்களில், விக்கெட் எதையும் இழக்காமல் 96 ரன்களைக் குவித்துள்ளது.
துவக்க வீராங்கனை ஷபாலி வெர்மா 29 பந்துகளில் 60 ரன்களை அடித்துள்ளார். இதில் 5 சிக்ஸர்கள் & 7 பவுண்டரிகள் அடக்கம். மற்றொரு வீராங்கனை மந்தனா 34 ரன்களை அடித்து களத்தில் உள்ளார்.
இந்திய அணி 69 பந்துகளில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் உள்ளது.