நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஜனத்தொகை காரணமாக, தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று ஐ.நா.வின் ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.

2027ம் ஆண்டுக்குள் இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும் என எதிர்பார்ப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்து உள்ளது. அதுபோ   2050ம் ஆண்டு இந்த புவியில் வாழ்பவர்களின் எண்ணிக்கை சுமார் 950 கோடியாக (950,00,00,000) இருக்கும் என்றும்,  2100ஆம் ஆண்டில் இதுவே 1100 கோடியாக இருக்கும். (1100,00,00,000) என்றும் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டைய கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்த மக்கட்தொகை 121 கோடியே 19 இலட்சத்து மூவாயிரத்தி நானூற்று இருபத்தி இரண்டு பேர் (1,210,193,422) உள்ளனர். மக்கட்தொகை தசாப்த வளர்ச்சி விகிதம் 17.70% ஆக உயர்ந்துள்ளது. அதிக மக்கட்தொகை (199,812,341) கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசமும், குறைந்த மக்கட் தொகை (610,577) கொண்ட மாநிலமாக சிக்கிமும் அறிவிக்கப்பட்டது.

தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துக்கொண்டே சென்று வருகிறது. இதன் காரணமாக வரும்  2027ம் ஆண்டு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடிக்கும் என்று ஐ.நா. கணித்து உள்ளது. அப்போது இந்தியாவில் இருக்கும் மக்கள் தொகை, அமெரிக்காவின் மக்கள் தொகையைக் காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட மக்கள் தொகை அறிக்கையில், உலகம் முழுவதும் சுமார்

தற்போது,  770 கோடி மக்கள் இருப்பதாகவும், இது  அடுத்த 30 ஆண்டுகளில் 950 கோடியாக அதிகரிக்கும் என்று தெரிவித்து உள்ளது.

மேலும,, மனிதனின் ஆயுள்காலம் அதிகரிக்கப்பட்டு, வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.