புதுடில்லி:
ந்த வருடம் பெய்து வரும் பருவமழை காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயரும் என நம்பப்படுகிறது.

நிடி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா
நிடி ஆயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனகரியா

இந்தியாவில் பெய்து வரும் பருவமழை காரணமாக நடப்பாண்டில் ( 2016 – 17) நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக உயரும் என ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவர் தெரிவித்துள்ளார்.
திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகரியா கூறியது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி பாதிப்பால், வேளாண் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இந்த நிலையிலும், கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்தாண்டு, பருவமழை துவங்கியுள்ளது.
இது வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் காரணமாக  2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்தை தாண்டும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
ஐந்து ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2015-16ம் நிதிஆண்டில் 7.6 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.