பிரபல தமிழ்க் கவிஞர்களில் ஒருவரான ஞானக்கூத்தன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது எழுபத்தி எட்டு.
1938ல் மயிலாடுதுறையில் பிறந்த அவரது இயற்பெயர் ரங்கநாதன். 1968ல் கவிதைகளை எழுத ஆரம்பித்த இவர்,  நவீன கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவராக அறியப்படுகிறார். ilavenil_2251896f_2949175f
ழ, கசடதபற, கவனம் ஆகிய சிற்றிதழ்களின் ஆசிரியர் குழுக்களில் ஞானக்கூத்தன் அங்கம்வகித்திருந்தார்.
அன்று வேறு கிழமை, சூரியனுக்குப் பின்பக்கம், கடற்கரையில் சில மரங்கள், ஞானக்கூத்தன் கவிதைகள் ஆகியவை அவரது தொகுப்புகளில் சிலவாகும்
கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.