டெல்லி: இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
ஜனவரி 6ம் தேதி வரை உருமாறிய புதிய வகை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 73 ஆக இருந்தது. இன்றுடன் சேர்த்து நாட்டில் இந்த வகை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதையடுத்து ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் 96 ஆக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.