டெல்லி:  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 47,092 பேருக்கு கொரோனா பாதிப்பு  கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் 509 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்துள்ளதாக பல மாநலிங்களில் கூறி வந்தாலும், தினசரி பாதிப்பு ஏறி இறங்கி வந்துகொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 40ஆயிரத்தை தொடர்ந்து வருகிறது. அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் தினசரி பாதிப்பு 32,803 ஆக உள்ளது. நாட்டின் மொத்த பாதிப்புகளில் கேரளாவில் மட்டுமே 75 சதவிகித பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை (காலை 8மணிவரையிலான நிலவரம்) வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும்  புதிதாக 47,092 பேர்  கண்டறியப்பட்டு உள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,28,57,937 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மேலும்,  509 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,529 ஆக உயர்ந்தது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தொற்றில் இருந்து ஒரே நாளில் 35,181 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,20,28,825 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 97.51% ஆக உயர்ந்துள்ளது

தற்போதைய நிலையில், நாடு முழுவதும்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,89,583 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.15% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 66,30,37,334 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் 81,09,244 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.