கூடங்குளம்: பராமரிப்பு பணி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதில் ஓரிரு நாளில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணுஉற்பத்திக்கான ஒப்பந்தம ரஷிய நாட்டுடன் 1988ம் ஆண்டு போடப்பட்டது. அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியும், ரஷ்ய அதிபர் மிக்கேல் கார்பசேவும் முன்னிலையில் கையெழுத்தானது. தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் 2001 ஆம் ஆண்டில் கையெழுத்தானது. அதையடுத்து அந்த பகுதி மக்களின் எதிப்பையும் மீறி அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், பல அணுஉலைகள் செயல்பாட்டுக்குள் வந்துள்ளன.

2013ம்ஆண்டு அக்டோபர் 22ந்தேதி  முதல் அணு உலை, மின்உற்பத்தியை தொடங்கியது. முதலில்  160 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து, 2014ம் ஆண்டு  ஜூன் 7 2014 அன்று முதல் அணு உமுழு உற்பத்தித் திறன் ஆன 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பராமரிப்பு பணி மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிக்காக ஜூன் 22ல் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக  390 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது ஓரிரு நாளில், 1,000 மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.