டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்திற்கு கீழும், உயிரிழப்பு ஆயிரத்துக்கும் கீழும் குறைந்துள்ளது. அதுபோல தொற்றில் இருந்து விடுபவர்கள் 96.80% ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தயது. ஏப்ரல் மே மாதங்களில் உச்சத்திருந்த தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஆரம்ப நாட்களில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை கடந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழே குறைந்துள்ளது. அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 50,040 ஆக இருந்த நிலையில், இன்று வெகுவாக குறைந்துள்ளது. இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,02,79,331 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்புகளுக்கு நேற்று ஒரே நாளில் 979 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனா 1258 ஆக இருந்த நிலையில், இன்று 979 ஆக குறைந்துள்ளது. இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,96,730 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 58,578 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,09,607 ஆக உயர்ந்துள்ளது. குணமடைவோர் 96.80% ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,72,994 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று ஒரே நாளில் 15,70,515 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 40,63,71,279 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.