டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்த 77 வழக்கறிஞர்களுக்கு உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி மவுன அஞ்சலி மற்றும் இரங்கல் தெரித்தார்.

கொரோனா பெருந்தொற்று நாடு முழுவதும்  கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த 2020ம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் நாசத்தை ஏற்படுத்திய கண்ணுக்குத்தெரியாத வைரசான கொரோனா, இந்த ஆண்டு மார்ச் மாதம் மூதல் 2வது அலையாக மீண்டும் பரவி கடுமையான சேதங்களையும், உயிரிழப்புகளையும் உருவாக்கியது. ஜாதி, மதம், இனம், தாழ்ந்தவர், உயர்ந்தவர், ஏழை, பணக்காரர் எந்த வித்தியாசமுமின்றி  லட்சக்கணக்கானோரை காவி வாங்கி உள்ளது.  இந்த தொற்று பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்  இதுவரை 3,02,79,331 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன்  3,96,730  பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதும் 5,72,994 பேர் சிசிச்சை பெற்று வருகின்றனர். இந்த பெருந்தொற்றுக்கு உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் 77 பேர் உயரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் இருப்பதால், நாடு முழுவதும் உச்சநீதிமன்றம் முதல் மாவட் நீதிமன்றங்கள் வரை,  நீதிமன்ற பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், இன்று காலை உச்சநீதிமன்றம் வந்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா தனது நீதிமன்றப் பணிகளைத்  தொடங்குவதற்கு முன், உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  இரண்டு நிமிடம் மவுனத்தைக் கடைப்பிடித்ததுடன், உயிர் இழந்த உயர் நீதிமன்றத்தின் 77 வழக்கறிஞர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.