டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 45,352 பேருக்கு புதிதாக பாதிக்கப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா 2வது அலை கட்டுக்குள் வந்த நிலையில், 3வதுஅலையின் தாக்கம் பரவத்தொடங்கி இருப்பதாக சுகாதார வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். கடந்த  மாதம் குறைந்து வந்த கொரொனா பாதிப்பு, சமீப நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 30ஆயிரத்தை கடந்த நிலையில், தற்போது 45ஆயிரத்தை கடந்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45 ஆயிரத்து 352 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,57,937 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 366 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,39,895 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,63,616 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 3,99,778 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும், இதுவரை 67,09,59,968 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]