டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 31,443 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதே வேளையில் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,31,315 ஆக குறைந்துள்ளது. இது 109 நாட்களுக்கு மிகக்குறைந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் புதியதாக மேலும், 31,443 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது 118 நாட்களுக்கு பிறகு குறைந்த பாதிப்பு.  இதன்மூலம்  மொத்த பாதிப்பு 3,09,07,282 ஆக உயர்ந்துள்ளது.

2,020 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 2,020 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,10,784 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 49,007 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,00,63,720 ஆக உயர்ந்துள்ளது.  குணமடைவோர்  97.28 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.‘

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,31,315 பேர் கொரோனாவுக்கு  சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 109 நாட்களில் மிகக்குறைந்தது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் இதுவரை பொதுமக்களுக்கு 38,14,67,646 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.