டெல்லி: இந்தியாவில் புதிதாக 2,11,298 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதுடன், கொரோனா உயிரிழப்பு 3,847 ஆக குறைந்துள்ளது. கடந்த 2 வாரங்களாக உயிரிழப்பு 4ஆயிரத்தை கடந்துச்சென்ற நிலையில், தொற்று பரவலும் 3 லட்சத்தை கடந்து சென்றது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை, கடந்த ஒரு சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. 40 நாட்களுக்குப்பிறகு தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு கீழே வந்தநிலையில் தற்போது பாதிப்பு 2லட்சத்து 10ஆயிரமாக உள்ளது. உயிரிழப்பு வெகுவாக குறைந்து இன்று உயிரிழப்பு 3ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 3,847 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,15,235 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரத்து 951 ஆக உயர்வடைந்து உள்ளது.
தற்போதைய நிலையில், நாடு முழுவதும 24,19,907 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியே 26 லட்சத்து 95 ஆயிரத்து 874 ஆக உள்ளது
இதுவரை 33 கோடியே 69 லட்சத்து 69 ஆயிரத்து 353 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன நேற்று ஒருநாளில் மட்டும் 21,57,857 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.