டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மேலும்  332 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் கணிசமாக குறைந்து வருகிறது. அதுபோல உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 266 நாட்களுக்கு இன்று பாதிப்பு குறைந்த அளவிலேயே பதிவாகி உள்ளது. அதுபோல 263 நாட்களுக்கு பிறகு கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனா பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நேற்று புதிதாக 10,126பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 332 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,61,389 ஆக அதிகரித்துள்ளது.  கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.34%ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,509 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 33,77,5086 பேர் குணமடைந்துள்ளனர்.  குணமடைவோர் விகிதம் 98.25%ஆக உள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,40,638 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 0.41% ஆக உள்ளது

இந்தியாவில் நேற்று 59,08,440 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதுவரை 1,09,08,16,356 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 10,85,848 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. இதுவரை 61,72,23,931 பேருக்கு சோதனை நடத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.