Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா

எல்லையில் பிங்கர் 4 மலைப்பகுதியை மீண்டும் கைப்பற்றியது இந்திய ராணுவம்…

Sep 11, 2020

லடாக்: எல்லையில் சீன ராணுவ நிலைகளுக்கு அருகே உள்ள பிங்கர் 4 மலைப்பகுதியை இந்திய ராணுவம்  மீண்டும் கைப்பற்றி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா சீனா இடையே எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.  பதற்றத்தை தணிக்கும் விதமாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு மந்திரிகள் மட்டம் உள்பட பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது. இருந்தாலும், சீன ராணுவம்,  அங்கிருந்து விலக மறுத்து வருவதால், பதற்றம் தொடர்ந்து வருகிறது.

லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் சீன ராணுவ துருப்புகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரு நாட்டு எல்லைகளுக்கும் முக்கிய இடமாக உள்ள  இந்த பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்து வருவது பதற்றத்தை மேலும் கூட்டியுள்ளது.

இந்த பரபரப்புக்கு இடையே கடந்த வாரம், எல்லைப்பகுதியான அருணாசலபிரதேசத்தில், எல்லைப்பகுதியில்  உள்ள கிராமத்தில் வேட்டைக்கு சென்ற 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால், எல்லைப்பகுதி மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு மாற்று இடத்துக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையில்,  லடாக்கின் லே-யில் உள்ள பாங்காங் ஏரி பகுதியில் பல்வேறு நிலைகள் உள்ளன. அதன்படி பிங்கர் 1 முதல் பிங்கர் 14 வரை பல்வேறு நிலைகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. பாங்காங் ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4 (விரல் 4) நிலை அமைந்துள்ளது.

கடந்த ஏப்ரல்-மே மாதங்களில், இந்த பகுதிகளில் சீன படையினர்  அத்துமீறி இந்த பகுதியை ஆக்கிரமித்து, நுழைந்துள்ளனர்.   தனது நிலைகளை அமைத்துள்ளனர்.  அவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய  ராணுவம் வலியுறுத்தி வந்த நிலையில், அதை சீன ராணுவம் கண்டுகொள்ளவில்லை. அதை விட உயரமான பகுதியை இந்திய ராணுவம் கைப்பற்றி  சீன ராணுவத்துக்கு செக் வைத்துள்ளது.

 இந்தியா கைப்பற்றியுள்ள மலைத்தொடர் சீன ராணுவ நிலைகளுக்கு மிக அருகிலும், உயரமாகவும் உள்ளது. இதன் மூலம் சீன ராணுவத்தின் நடவடிக்கையை கண்காணிக்க முடியும் என்றும்,  , தற்போது பிங்கர் 4 பகுதியின் மிகவும் உயரமான மலைத்தொடர் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதன் காரணமாக, எல்லை பகுதியில் இந்தியா-சீனா இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Post navigation

உருளைக்கிழங்கு பயிரிடுவதற்காக உருவாகியுள்ள நவீன இயந்திரம்!
கொரோனாவுக்கு டெக்ஸாமெதாசோன் தடுப்பூசி ஓரளவு பலனளித்துள்ளது! உலக சுகாதார நிறுவனம்

Related Post

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

இந்தியா

எல்பிஜி சிலிண்டர் விதிகளில் தளர்வு: கிராமப்புற மக்களும் இனி 25 நாட்களுக்கு ஒருமுறை சிலிண்டர் பெறலாம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer