புதுடெல்லி:
ர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு  விடுப்பு 6 மாதமாக  வகை செய்யும் திருத்த மசோதா  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை  காலத்தை இரட்டிப்பாக்கும் மசோதாவிற்கு இந்திய நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

தற்போது 3 மாதமாக உள்ள மகப்பேறு விடுப்பு இனிமேல் ஆறரை  மாதமாக உயர்த்தப்படுகிறது. இதற்கான திருத்த மசோதா பாராளுமன்ற மேலவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இந்த சட்ட திருத்த மசோதா  மூலம் , கர்ப்பிணி பெண்களுக்கு 26 வாரங்களுக்கு, சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கும். தற்போது, 12 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவோர், குழந்தையை தத்தெடுப்போருக்கும் இந்த பேறுகால விடுமுறை பொருந்தும். அதற்கான திருத்தங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
பெண்கள் அதிகமாக வேலை செய்யும் நிறுவனங்கள், பெண்களை பணியில் அமர்த்தும்போது, அவர்களின்  குழந்தைகளுக்கு தேவையான  பரமாரிப்பு வசதிகளை செய்துதர வேண்டும் என்ற அம்சமும் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பெண்கள் குழந்தை பெற்றபிறகு, குழந்தையை வளர்ப்பதற்காக  வேலைக்கு செல்வதை தவிர்க்கின்றனர். ஆனால் மேற்காணும் அம்சங்கள் உள்ள திருத்த மசோதா நிறைவேறினால் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலை அதிகரிக்கும் என தெரிகிறது
இந்த மசோதா பாராளுமன்ற மக்களவையின் ஒப்புதல்  பெறப்பட்ட பிறகு ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.