சென்னை:
சென்னை ரெயிலில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு என ஆர்பிஎப் துணைத்லைவர் பகத் அறிவித்து உள்ளார்.

ரெயில் பெட்டியில் துளையிடப்பட்ட பகுதி
ரெயில் பெட்டியில் துளையிடப்பட்ட பகுதி

ரெயில் கொள்ளை பற்றிய விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு,  தற்போது 5 தனிப்படைகள் மூலம் விசாரணை முடுக்கி விடப்பட்டு உள்ளது.
கடந்த 8ம் தேதி இரவு சென்னை எழும்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில்  சுமார் 342 கோடி ரூபாய் சென்னை ரிசர்வ வங்கிக்காக கொண்டு வரப்பட்டது. சேலத்திலிருந்து சென்னை வரும்போது, ஓடும் ரெயிலின் கூரையில் ஓட்டை போட்டு ரூ.6 கோடியை கொள்ளையடித்த வழக்கில் எந்த துப்பும் கிடைக்காமல் ரெயில்வே போலீசார் திணறி வருகின்றனர். இந்நிலையில் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி அசோக்குமார் உத்தரவிட்டார்.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக டிஎஸ்பி சிவனுபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். ரெயில் கொள்ளை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடந்தது.  இதில் 5 தனிப்படைகள் நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு  5 டி.எஸ் பி.க்கள் மற்றும் 15 இன்ஸ்பெக்டர்களை  நியமிக்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரெயில் பெட்டியில் துளையிடப்பட்ட பகுதி (உள்படம்)
ரெயில் பெட்டியில் துளையிடப்பட்ட பகுதி 

மேலும் ரெயில்பெட்டி திருப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்டபோதே, மேற்கூரையில் துளை போடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் சிபிசிஐடி போலீசார் கூறினார்.
இதுபற்றி திருப்பூர் யார்டு ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும், பணம் அனுப்பிய வங்கி ஊழியர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, ரயில் கொள்ளை தொடர்பாக திருப்பூரில் பணிபுரிந்த வடமாநிலத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.
RPF துணைதலைவர் பகத் விசாரணை
RPF துணைதலைவர் பகத் விசாரணை

சேலத்தில் நேற்று ஆய்வு செய்த, ஆர்.பி.எப்., துணை இயக்குநர் பகத் பேசும்போது,  கொள்ளை சம்பவம் குறித்து பேசிய ரெயில்வே பாதுகாப்பு படையும் விசாரித்து வருகிறது. ரெயில்வே பாதுகாப்பு படை,  ரெயில்வே போலீசார் இணைந்தே விசாரணை நடத்தி வருகிறோம். ரெயில் கடந்து சென்ற தடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை கிடைத்த தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொண்டு வருகிறோம் ,  தமிழக சிபிசிஐடி போலீசாருடன் இணைந்தே செயல்படுவாம் என்றார்.
மேலும் ரெயில் கொள்ளை சம்பவம் தொடர்பாக முக்கிய துப்பு கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனக்கூறினார்.