கோபி:
திருப்பூர் தொகுதி அதிமுக எம்.பி.யாக இருப்பவர் சத்தியபாமா. வயது 45. அவருக்கு 22 வயதில் மகன் இருக்கிறார். இவரை விவாகரத்து செய்ய கோரி அவரது கணவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 25 ஆண்டு கால மணவாழ்க்கை கசந்து போனது.
சத்தியபாமாவின் சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள உள்ள சிறுவலூர் கிராமம். இவரது கணவர் வாசு , ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார்.
2014ல் மக்களவை தேர்தலில்  திருப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் சத்தியபாமா. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சத்தியபாமா எம்.பி.யான பிறகே இந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எம்.பி. சத்தியபாமா கணவர் வாசு
எம்.பி. சத்தியபாமா    –   கணவர் வாசு

இருவருக்கும் இடையே போனில் நடந்த வாக்குவதம் பற்றிய உரையாடல் கடந்த மாதம் வாட்ஸ்அப்பில் பரவி, தமிழகம் முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையயில் சத்தியபாமாவின் கணவர் வாசு  சத்தியபாமா மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார்.   கோபி நகர அதிமுக செயலாளருடன் கள்ளக்காதல் உள்ளார் என்றும்,  அவரை திருமணம் செய்து கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும தன்னை கொலை செய்ய முயற்சி செய்கிறார், இதுகுறித்து முதல்வருக்கு புகார் அனுப்பி உள்ளேன் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறினார்.
அரசியலில் ஈடுபட்ட பிறகு சத்தியபாமாவின் நடவடிக்கைகள்  மாறத்தொடங்கியதாகவும், எம்.பி.யான பிறகு தன்னை உதாசீனப்படுத்துவதாகவும் வாசு குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த சத்தியபாமா, இது எங்கள் குடும்ப பிரச்சினை யாரும் தலையிட வேண்டாம், என்றும் எனக்கு வேறு திருமணம் நடக்கவில்லை, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வான் என்றார்.
கோபி நகர  அதிமுக செயலாளர் சையத் புடான்ஷா கூறுகையில், வாசு சொல்வது பொய், எனக்கும், சத்தியபாமாவுக்கும் திருமணம் நடக்கவில்லை என்று மறுத்தார்.
இதையடுத்து, வாசு, கடந்த 9ம் தேதி சத்தியபாமா எம்.பிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளார். தனது நலனுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டுவதாகவும், வேறு ஒருவரை மறு திருமணம் செய்துகொண்டதாகவும் கூறி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் தொகுதி அதிமுக எம்.பி. சத்தியபாமாவும், வாசுவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 1990-ல் இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது.  இவர்களுக்கு சத்தியவசந்த் (25) என்ற மகன் உள்ளார். 25 வருடங்களுக்கு பிறகு, தற்போது இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.