இந்தியா : ஒரு பக்கம் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு – மறுபக்கம் ஊரடங்கு தளர்வு

Must read

டில்லி

ந்தியாவில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து  வருகிறது

இந்தியாவில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த  மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  அதன்பிறகு அந்த ஊரடங்கு மே மாதம் 3 வரை நீட்டிக்கப்பட்டது.  ஆயினும் கொரோனா பாதிப்பு குறையாததால் தற்போது மேலும் இரு வாரங்கள்  நீட்டிக்கப்பட்டுள்ளது.   இவ்வேளையில் மத்திய அரசு தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சீராக அதிகரிப்பதால் ஊரடங்கு உத்தரவில் சிறு தளர்வுகளை அனுமதிக்கலாம் என தெரிவித்தது.

அதையொட்டி ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கு விதிகள் இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளன.   ஊரடங்கில் தளர்வுகள் அனுமதிக்கலாம் என அறிவிப்பு வந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை சுமார் 4898 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  ஆனால் தற்போது பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த தளர்வு இப்போது அவசியமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன.

கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையின்படி சிவப்பு, ஆரஞ்சு பச்சை என மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசின் அறிவிப்பின்படி 3இல் இரு பங்கு மக்கள் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் வசித்து வருகின்றனர்.  மூன்றில் ஒருவர் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் உள்ளனர்.  தற்போது ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலத்தில் ஊரடங்கு விதிகள் தளர்த்தப்படவில்லை.  நாட்டில் உள்ள முக்கிய  பெரு நகரங்கள் இந்த சிவப்பு மண்டலங்களின் கீழ் வருகின்றன.  இந்த மண்டலங்களில் கடந்த ஏப்ரல் 14 முதல் மே 3 வரையிலான இரண்டாம் கட்ட ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   முதலில் இந்த நகரங்களும் ஆரஞ்சு மற்றும் பச்சையாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

More articles

Latest article