டில்லி

டந்த 2018 ஆம் ஆண்டு நடந்த புலிகள் கணக்கெடுப்பில் 2967 புலிகள் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் உள்ள புலிகள் கணக்கெடுப்பு நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடந்து வருகிறது.   அதன்படி கடந்த 2006, 10, 14 மற்றும் 18 ஆம் வருடங்களில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.  அவ்வகையில் கடந்த 2010 ஆம் வருடம் 1411 புலிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   அதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பில் புலிகளின் எண்ணிக்கை உயர்ந்து 2226 ஆகி உள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று புலிகள் கணக்கெடுப்பு விவரத்தை வெளியிட்டார்.  மோடி, “கடந்த 2014 ஆம் ஆண்டு புலிகள் எண்ணிக்கை 2226 ஆக இ இருந்தது.  அதே நேரத்தில் 2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி புலிகள் எண்ணிக்கை 2967 ஆகி உள்ளது.  இவ்வாறு எண்ணிக்கை உயர்வது நல்ல அறிகுறி ஆகும்.

இதன் மூலம் உலக நாடுகளில் இந்தியா புலிகளுக்கு பாதுகாப்பான வாழ்விடங்களில் ஒன்றாகி உள்ளது.    இந்த புலிகள் எண்ணிக்கை உயர்வு ஒவ்வொரு இந்தியனையும், இயற்கை ஆர்வலர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.    இவ்வாறு நான்காண்டுகளில் 700 க்கும் மேல் புலிகல் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உலக அளவில் வரும்  2022 ஆம் வருடம் புலிகள் எண்ணிக்கையை இருமடங்காக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.    இந்தியா அந்த இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்பே எட்டி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.