சென்னை:
கொரோனா தொற்று பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டு உள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள் மற்றும் மருத்துவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, நேற்று காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்களிடமும் போன் ஞமுலம் ஆலோசனை நடத்தினார். இது கட்சிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், இந்தியாவும் உலகமும் கொரோனாவில் மிக முக்கிய அடுத்த இரு கட்டத்துக்குள் நுழைகிறது.என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பரவுவதில் இந்தியா இன்று மிக முக்கியமான கட்டத்தில் நுழைகிறது. எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்.
எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்தாலோசித்ததை எல்லோரும் வரவேற்கிறோம். கொரோனா பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் ஆதரவளிப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தால், அது ஆக்கபூர்வமான விமர்சனம் மற்றும் ஒத்துழைப்புடன் இருந்தது.
தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்து உள்ளது, இந்த நேரத்தின் தேவை ஆக்கிரமிப்பு மற்றும் விரிவான சோதனை. அந்த முயற்சியை அரசாங்கம் இன்று ஆரம்பிக்கட்டும்.
மிகப் பரவலாக, மிக அவரமாக, மிக வேகமாக பரிசோதனை (testing) செய்ய வேண்டும். இதனை அரசு இன்றே தொடங்கவேண்டும். எல்லா மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாடு அரசு இந்தப் பரவலான அதிகமான பரிசோதனைத் திட்டத்தை இன்றே தொடங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.