துபாய்: கொரோனாவால் கச்சா எண்ணெய் விலை சரிந்திருக்கும் நிலையில் அதை சேமித்து வைப்பதில் இந்தியா தோல்வியை சந்தித்து இருக்கிறது.

உலக நாடுகளில் 3வது கச்சா எண்ணெய் இறக்குமதியாளர் என்ற பெருமையை பெற்றிருப்பது இந்தியா. தற்போது உலகெங்கிலும் கச்சா எண்ணெய் விலைகள் அடிமட்டத்துக்கு சென்றுவிட்டன.

ஆனால், இந்தியா இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளும் நிலையில் இல்லை. காரணம் தற்போது மலிவான எண்ணெயை சேமித்து வைக்கும் சேமிப்பு திறன் இல்லை. மார்ச் கடைசி வாரத்தில் நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டதிலிருந்து நாட்டின் எண்ணெய் சேமிப்பு திறனில் கிட்டத்தட்ட 95% நிரப்பப்பட்டுள்ளது.

குறைந்த பயணத்தின் காரணமாக, சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது அவற்றின் திறன்களில் 40-50% வரை இயங்குகின்றன. இந்தியாவின் எண்ணெய் தேவையில் பாதிக்கும் மேலான டீசல் மற்றும் பெட்ரோல் நுகர்வு ஏப்ரல் முதல் பாதியில் 60% க்கும் கீழே குறைந்தது.

சீனா மற்றும் ஜப்பானுடன் ஒப்பிடும்போது நமது நாட்டின் சேமிப்பு திறன் குறைவாக இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் சுமார் 39 மில்லியன் பீப்பாய்களை சேமிக்க முடியும். அது விநியோகிப்பதில்  இடையூறு ஏற்பட்டால் சேமிப்பில் உள்ளவற்றை 9 மட்டுமே பராமரிக்க முடியும்.

ஆனால் சீனாவின் மொத்த கொள்ளளவு 550 மில்லியன் பீப்பாய்களாகும்.  ஜப்பானின் 528 மில்லியன் பீப்பாய்கள். இது 190 நாட்களுக்கு மேல் வினியோகிக்க வழங்கும் என்பதை உறுதி செய்கிறது.