நாக்பூர்,

லங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இலங்கையை விட 239 ரன் அதிகம் எடுத்து அசத்தி உள்ளது.

நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வந்த போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது. முதல் இன்னிங்சில், இந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்து வீச்சுக்கு தாக்குபிடிக்க முடியாமல், 205 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து பேட்டை பிடிந்த இந்திய இந்திய அணி, அசர வேகத்தில் விளையாடி 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. விராட் கோலி இரட்டை சதம் இந்த போட்டியின்போது, இந்திய அணி கேப்டன் விராட்கோலி அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்தார். இதன் காரணமாக 5வது இரட்டை சதத்தை எடுத்துள்ளார் கோலி. இதன்மூலம் அதிக இரட்டை சதங்கள் அடித்தோர் பட்டியலில் பிரைன் லாராவுடன் முதல் இடத்தை பகிர்ந்ததோடு சாதனையையும் சமன் செய்துள்ளார்.

இந்த போட்டியில், தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், புஜாரா, ரோகித் ஷர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அசத்தினர். இதன் காரணமாக 405 ரன் பின்தங்கிய நிலையில், இலங்கை அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும், இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துக்களை சமாளிக்க முடியாத, இலங்கை அணியினர் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். இறுதியில் இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 166 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அஸ்வின் அபாரம் இந்திய அணி தரப்பில் அஸ்வின் அசால்டாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வெளியேற்றினார். அஸ்வின் இதுவரை விளையாடி உள்ள டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். மேலும், ஜடேஜா, இஷாந்த், உமேஷ் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி தலா 2 விக்கெட்டு வீழ்த்தி சாதனை படைத்தனர். இதன் காரணமாக இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என கணக்கில் முன்னிலை வகிக்கிறது.  வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி டில்லியில் மூன்றாம் டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.

இந்த போட்டியில் அஸ்வின் தனது டெஸ்ட் மாட்சின் 300 ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.  அவர் குறைந்த டெஸ்ட்டுகளில் அதாவது 54 டெஸ்ட்களில் 300 விக்கட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.  இதற்கு முன்பு ஆஸ்திரேலிய வீரார் டென்னிஸ் லில்லி 56 டெஸ்ட்டுகளில் 300 விக்கெட் எடுத்திருந்தார்.