டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது.
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாதிப்புகளை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா இறப்பு விகதம் குறைந்துள்ளது. உலகில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியாவோரின் எண்ணிக்கையும் இந்தியாவில் குறைவாக உள்ளதாக  மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தை கடந்துவிட்டது. இப்போது வரை 15,14,058 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் 5,10,469 ஆகியோர் சிகிச்சையில் உள்ளனர். 9,69,336 பேர் சிகிச்சையில் இருந்து குணமாகி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.