டெல்லியில் இன்றும் ஆயிரத்தை கடந்த கொரோனா: பாதிக்கப்பட்ட எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்வு

Must read

டெல்லி: டெல்லியில் மேலும் 1,056 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, அங்கு ஒட்டு மொத்த எண்ணிக்கை 1.32 லட்சமாக உயர்ந்துள்ளது.
டெல்லியில் கொரோனா வைரசின் தாக்கம் ஓயவில்லை. ஒரு பக்கம் அதிகரித்து கொண்டே வந்த நிலையிலும், தற்பொழுது குறைய தொடங்கியுள்ளது.
அந்த வகையில், அங்கு புதியதாக 1,056 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இந் நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,32,275 ஆக அதிகரித்தது.
அதுதவிர, டெல்லியில் ஒரே நாளில் 1,135 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். அதன்மூலம் அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,17,507 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 28 பேர் உயிரிழக்க பலியானவர்களின் எண்ணிக்கை 3,881 ஆக அதிகரித்து உள்ளது. இன்னமும் 10,887 பேர் கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை கூறி உள்ளது.

More articles

Latest article